வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சிறுவர்களுக்கான போசாக்கு மற்றும் நல்வாழ்வு செயற்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இச்செயற்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 கிராமங்களும் ஒரு முன்பள்ளியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பாடசாலையும் 6 முன்பள்ளிகளும் உள்ளடங்கலாக 336 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.