மார்கழி மாதம் 24ஆம் திகதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் திறந்துவைக்கப்பட்ட புனித கதவு வழியாக கடந்த இருவாரத்தில் 545, 532 பேர் கடந்து சென்றுள்ளதாக யூபிலி அலுவலகத்திற்கு பொறுப்பான நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் பேராயர் Rino Fisichella அறிவித்தார்.

பெரிய அளவில் திருப்பயணிகள் ஆர்வம் காட்டி புனிதக் கதவுக்குள் நுழைவது, உரோம் நகரில் நிலவும் பாதுகாப்பின் உறுதித்தன்மையை உணர்த்துவதாக உள்ளதென தெரிவித்த பேராயர், வத்திக்கானின் பாதுகாப்புத்துறை, இத்தாலியக் காவல்துறை, உரோம் நிர்வாகம் ஆகியவைகளின் ஒத்துழைப்பையும் பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்ட பேராயர் Fisichella அவர்கள், ஜனவரி மாதம் 5ஆம் திகதி உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவிலின் புனித கதவு திறக்கப்பட்டதிலிருந்து உரோம் நகரின் அனைத்து நான்கு பெருங்கோவில்களின் புனிதக் கதவு வழியாகவும் திருப்பயணிகள் சென்று பலனடைந்து வருகின்றனர் எனவும மேலும் தெரிவித்தார்.

By admin