வடமாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட சங்கீதப் போட்டி 30ஆம் திகதி சனிக்கிழமை பூநகரி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் மண்டைதீவு றோ.க.வித்தியாலய மாணவிகள் செல்வி மரிய றொசியா தனி இசைப்போட்டியில் முதலாம் இடத்தையும் செல்வி ஜெரால்ட் துசியந்தினி தனிப்பாடல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் குழுப்பாடல் போட்டியிலும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.