2024 இறைவேண்டல் ஆண்டின் சிறப்பு நிகழ்வாக வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மறைமாவட்ட ஆயர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், திருச்செபமாலை, திருப்பலி, தியான உரை என்பவை இடம்பெற்றன.
திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்கள் ‘புனித மரியன்னையும் குருக்களும்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றியதுடன் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள்
தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து தோழமை விருந்தும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழ்மறைமாவட்டங்களை சேர்ந்த 200ற்கும் அதிகமான குருக்கள், துறவிகள் பங்குபற்றினர்.