மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘யூபிலி நாயகனின் அன்புக் காவியம்’ திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலையருவி கலையரங்கில் நடைபெற்றது.
கலையருவி இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 300ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்புடன் மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்கள் தயாரித்து நெறியாள்கை செய்திருந்தார்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம், மன்னார் நகர பிரதேச செயலாளர் திரு. பிரதீப் மற்றும் குருக்கள் துறவிகள், அருட்சகோதரிகள், மக்களென நான்காயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.