மானிப்பாய் திருக்குடும்ப பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டிற்கான திருப்பயணம் கடந்த 01திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளைகள் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயம், பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலம், சில்லாலை புனித யோசப்வாஸ் ஆலயம், புனித கதிரை மாதா ஆலயம், மாதகல் கெபி மற்றும் இளவாலை நட்பு மண் பூங்கா ஆகிய இடங்களை தரிசித்தனர்.
இந்நிகழ்வில் 45 பிள்ளைகள் பங்குபற்றி பயனடைந்தனர்.
அத்துடன் மானிப்பாய் திருக்குடும்ப அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட திரிதின ஆராதனைகள் 31ம், 1ம், 2ம், 3ம் திகதிகளில் திருக்குடும்ப கன்னியர் மட சிற்றாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்குடும்ப பொதுநிலையினர், இளையோர், பிள்ளைகள், புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பங்கு மக்கள் கலந்து கொண்டதுடன் இறுதி நற்கருணை ஆசீரை யாழ். புனித. மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரெட்ணம் அவர்கள் வழங்கிவைத்தார்.