யாழ். மாகாண அமலமரி மறைபரப்பு பொதுநிலையினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரியையும் தியானமும் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனிக்குளம் கல்வாரி பூங்காவில் நடைபெற்றது.

மறைபரப்பு பொதுநிலை இயக்குநர் அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மல்லாவி பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இத்தியானத்தில், சிலுவைப்பாதை, தியான உரை, நற்கருணை ஆராதனை, திருப்பலி என்பன இடம்பெற்றன.

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மரினோ அவர்கள் கலந்து இத்தியானத்தை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் மன்னார் மற்றும் யாழ். மறைமாவட்டத்தின் 10 அலகுகளை சேர்த்த பொதுநிலையினரும் யாழ் போதனா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டிலூஷன் அவர்கள் தலைமையிலான தாதியர்கள், ஊழியர்களென 220 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin