யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை மறையுரைஞர் குழுமத்தின் ஏற்பாட்டில் யூபிலி ஆண்டின் சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டுவரும் தவக்கால தியானங்கள் இம்மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகி கொழும்பு குருநாகல் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டங்களின் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன.
குழும தலைவர் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இத்தியானங்களில்
திருப்பலி, நற்கருணை வழிபாடு, சிலுவைப்பாதை, ஒப்புரவு அருட்சாதனம், குணமாக்கல் வழிபாடு, கருத்துரைகள் என்பன இடம்பெறுவதுடன் இவற்றில் ஏராளமான மக்கள் பக்தியுடன் பங்குபற்றி வருகின்றனர்.