யாழ்.மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமாதான தினம் 21ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மணியங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது.
‘இனவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டுவோம்’ என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையின் யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை றமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.