யாழ். மாகண அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர் மற்றும் அருட்சகோதரருக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கொழும்புத்துறை புனித இயூஜின் டி மசெனட் சிற்றாலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர் கிறேசியன் றெமோசன் அவர்கள் குருவாகவும் அருட்சகோதரன் ஜேம்ஸ் ராஜகுலேந்திரன் ராஜ ஜெனிஸ்ரன் அவர்கள் திருத்தொண்டராகவும் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இருவரையும் யாழ். மறை அலை தொலைக்காட்சி குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.