யாழ். மறைமாவட்ட வின்சென்டிப்போல் மத்திய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்டிப்போல் திருவிழாவும் மத்தியசபையின் வருடாந்த பொதுக்கூட்டமும் யாழ்ப்பாணத்தில் 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் திருநாள் திருப்பலியும் தொடர்ந்து பாதுகாவலன் மண்டபத்தில் மத்தியசபையின் வருடாந்த பொதுக்கூட்டமும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.தொடர்ந்து வின்சென்டிப்போல் மத்தியசபை தலைவி மரியநாயகி அவர்களின் தலைமையில் வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வின்சென்டி போல் தேசிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மைக்கல் இராஜேந்திரம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் திரு.யூட் வோல்டன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன் மன்னார் மறைமாவட்ட மத்தியசபையின் ஆன்ம ஆலோசகர் , இரத்தினபுரி மறைமாவட்ட மத்தியசபை தலைவி , தேசிய வின்சென்டிப்போல் சபை தலைவி , மறைக்கோட்ட வின்சென்டிப்போல் உறுப்பினர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.