திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் பேதுரு பெருங்கோவிலில் 24ஆம் திகதி கிறிஸ்து பிறப்புவிழா நள்ளிரவு திருப்பலிக்கு முன்பாக புனித கதவை திறந்து யூபிலி ஆண்டை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இதனை தொடர்ந்து மறைமாவட்ட ரீதியாக யூபிலி ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் யாழ். மறைமாவட்டத்தில் யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் யூபிலி கதவை திறந்து யூபிலி சிலுவையை ஆசீர்வதித்து யூபிலி ஆண்டை அங்குரார்ப்பணம் செய்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம், மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.