‘புதிதாய் வாழ்வோம்’ என்னும் கருப்பொருளில் யாழ் மறைமாவட்டத்தில் புதுப்பித்தலை ஏற்படுத்தும் நோக்கோடு யாழ் ஆயர் அதி. வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் அறிவிக்கப்பட்டு பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆயத்தங்களின் பின்பு யாழ் மறைமாவட்ட மேய்ப்புப் பணி மாநாடு ஆயர் தலைமையில் இன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. மாநாடு செப்ரெம்பர் 29 – ஒக்ரோபர் 01, 2016 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
இன்றைய முதல் நாள் நிகழ்விற்கு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. நோயல் இம்மானுவல் ஆண்டகை அவர்கள் பங்கெடுத்துக்கொண்டு இருக்கிறார். அதேவேளையில் மறைமாவட்ட அருட்தந்தையர்கள், மறை மாவட்டத்தில் பணியாற்றும் துறவறப் பணியாளர்கள் பொதுநிலை பிரதிநிதிகள் என பல்வேறு நிலைகளில் மாநாட்டில் பங்கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய நாள் ஆரம்ப நிகழ்வுகளின் பதிவுகள் சில!