இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மைகருதி யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் சமயம், கணிதம், தமிழ், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் வருகின்ற 11ஆம், 16ஆம், 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
மறைக்கோட்டங்களில் அமைந்துள்ள கல்வி வலய ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இக்கருத்தரங்கள் யாழ்ப்பாணம், இளவாலை, தீவகம், பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளன.