யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேனை அங்கத்தவர்களின் அர்ப்பண நிகழ்வும் தொடர்த்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 800இற்கும் அதிகமான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றி தமது வாக்குறுதிகளை புதுப்பித்துக்கொண்டார்கள்.