யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் கழக அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஆன்மீகப் புதுப்பித்தல் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவுளப்பணியாளர் சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் யூபிலி ஆண்டு தொடர்பான தியான உரையும் இடம்பெற்றன.

திருப்பலியை தொடர்ந்து அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடலும் கழகத்தின் கடந்தகால, எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும், மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் 60 வரையான அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin