யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
கழக தலைவர் திரு இராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை விரிவுரையாளர் அருட்தந்தை ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து ‘பொதுநிலையினர் ஆன்மீகம்’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து வருடாந்த பொதுநிலையினர் மாநாடு மற்றும் மறைக்கோட்ட எழுச்சி நாள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றன.