யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்காக நடைபெறவுள்ள பொதுநிலையினர் களஅனுபவ பயிற்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர்கள் மற்றும் மறைமாவட்ட பக்திச்சபை பிரதிநிதிகள் பங்குபற்றியதுடன் கியூபா நாட்டில் பணிபுரியும் கிளரேசியன் சபையை சேர்ந்த அருட்தந்தை லீனஸ் அவர்கள் கலந்து கியூபா நாட்டு திருஅவை பற்றியும் அங்கு அவர் ஆற்றிவரும் மறைபணி பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.