யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் மன்னார் மடுத்திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினார்கள்.

திருப்பலியை அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் நற்கருணை பணியாளர் சபை அருட்தந்தை மங்களராஜா அவர்களால் தவக்காலம் பற்றிய சிறப்புரையும் வழங்கப்பட்டது.

இவ் யாத்திரையில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 350ற்கும் அதிகமான அங்கத்தவர்கள் மற்றும் அருட்சகோதரிகள் பங்குபற்றியிருந்தனர்.

 

By admin