எம் விசுவாச வாழ்வை புதுப்பிக்கும் வருகையான மருதமடு அன்னையின் யாழ். வருகை, உயிர்த்த இயேசுவை எம் வாழ்வில் கொண்டிருக்கின்றோமா என பார்ப்பதற்காக எமை தேடிவரும் ஒரு வருகையாகவும் அமைந்துள்ளதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் வெளியிட்டுள்ள ஈஸ்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் எமது ஈஸ்டர் காலத்தை மருதமடு அன்னையின் பிரசன்னத்தில் கழிக்க இருப்பது யாழ். மறைமாவட்ட
இறைமக்களாகிய எமக்கு கிடைத்த ஒரு சிறப்பான வரப்பிரசாதமெனவும், அவர் எங்களை சந்திக்க வருவது எமது தேவைகளை கேட்பதற்காக மட்டுமல்ல மாறாக எமக்காக இந்த உலகத்திலே பிறந்து பாடுபட்டு இறந்து உயிர்த்தெழுந்த இயேசுவை நாம் எங்களுடைய வாழ்க்கையில் கொண்டிருக்கின்றோமா என்பதை பார்ப்பதற்காகவுமே அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கிய பொழுது அம்மா இதோ உன் மகன் என்று யோவானை காட்டிய அந்த நேரத்திலே இருந்து அன்னை மரியா எங்கள் எல்லோரையும் தன் சொந்த பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு பராமரித்து வருகின்றாரெனவும் அப்பராமரிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவே அவர் எம்மை தேடிவரும் இந்நிகழ்வு அமைந்துள்ளதெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

 

By admin