யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த அருட்தந்தை ஜோன் பீற்றர் அவர்கள் கலந்து திருச்செபமாலை, தியான உரை, நற்கருணை ஆராதனை என்பவற்றினூடாக குருக்களை வழிப்படுத்தினார்.
இத்தியானத்தில் 100க்கும் அதிகமான குருக்கள் பங்குபற்றினர்.