யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமான கத்தோலிக்க வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி திரு. தனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பேராலய மண்டபத்தில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், வைத்தியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.