யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த தவக்கால யாத்திரை கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவிற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற திருச்சிலுவைப்பாதை தியானம், தியான உரை, திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினார்கள்.
இந்நிகழ்வில் 40 வரையான கத்தோலிக்க ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.