யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநரும் சங்க போசகருமான அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஆயர் எமிலியானுஸ் இல்லத்தை தரிசித்து அங்குள்ள ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் ஓய்வுநிலை குருக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

By admin