புதிதாக நியமனம் பெற்ற யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை முதல்வி அருட்சகோதரி அனா மரியா அல்கால்டா மற்றும் சொமஸ்கன் சபை இந்திய மாகாண முதல்வர் அருட்தந்தை அக்னல் அமலன் ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களை கடந்த 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.