அருள்தரும் யூபிலி ஆண்டில் அன்னையின் கரம்பிடித்து ஏமாற்றத்தை தவிர்த்து உளமாற்றத்தை நோக்கி பயணிப்போமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் உலகில் நிலவிய இயற்கை அனர்த்தங்கள், யுத்த அழிவுகள், இடப்பெயர்வுகள், விபத்துக்கள், அரசியல் குழப்பங்கள் போன்ற பெரும் சவால்களோடு போராடி புதிய வருடத்தில் காலடி எடுத்துவைத்துள்ள எம்மை நம்பிக்கையோடு புதிய வருடத்தில் பயணத்தை தொடருங்களென உலக திருஅவை புனித கதைவைத் திறந்துவைத்து யூபிலி ஆண்டுக்குள் அழைத்துச்செல்கின்றதெனவும் இவ் அழைப்பையேற்று எமது வாழ்வை புனிதப்படுத்தி இயற்கையோடு ஒன்றித்து இறை அருளைப்பெற்று அவ்வருளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் புனித கன்னிமரியாளை வழிகாட்டும் விண்மீனாகக்கொண்டு அருளின் வழியில் நாம் இவ்வருடம் முழுவதும் பயணித்து யூபிலி ஆண்டு நிகழ்வுகளில் ஈடுபாட்டுடன் அதன் அர்த்தமுணர்ந்து பங்கெடுப்போமெனவும் தனது செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

By admin