இறைவனின் அன்பு கடந்த இரக்கத்தை பிரதிபலிக்கும் யூபிலி ஆண்டின் இத்தவக்காலத்தில் நாம் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக ஒருமித்து கிறிஸ்துவின் ஓர் உடலாக பயணிக்க வேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில் அழைப்பு விடுத்துள்ளார்.
இச்சுற்றுமடலில், தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய நற்செயல்களான இறைவேண்டல், நோன்பு, ஈகை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விடயங்களையும் விபரித்துள்ளார்.
அத்துடன் உலக ஆயர் மன்ற கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஏட்டின் செயலமர்வில் நாம் எட்டிய முடிவுகளை செயற்படுத்த பங்குத்தந்தையர்களுக்கு ஆதரவு நல்கும் படியும் திருத்தந்தையின் உடல் நலனிற்காக இறைவனிடம் மன்றாடும் படியும் கேட்டுக்கொண்டுள்ள ஆயர் அவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் நாம் பொறுமையுடன் எமது தீர்க்கமான முடிவை வெளிப்படுத்த ஒன்றுபட வேண்டுமெனவும் அழைப்புவிடுத்துள்ளார்.