மரணத்தின் மீதான வாழ்வின் வெற்றியை இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பு எமக்கு நினைவூட்டுவதுடன் பல்வேறு துன்ப, துயரங்களால் அலைக்களிக்கப்பட்டு வாழ்வில் விரக்தியை அனுபவிக்கின்ற மக்களுக்கு அது நம்பிக்கையை தருகின்றதெனவும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கியுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இயேசுகிறிஸ்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் நமக்காக புனிதம் நிறைந்த வாழ்வுக்கான வாயில்களைத் திறந்துள்ளாரெனவும் விண்ணக வாழ்விற்;கு மட்டுமன்று, மண்ணுலக வாழ்விலும் நமது குடும்பங்கள், சமூகங்கள், உலகம் முழுமைக்கும், குறிப்பாக நமது திருஅவைக்கும் இறைவனது அன்பு நிறைந்த பராமரிப்பு இயேசுவின் உயிர்ப்பின் மூலம் அருளப்படுகின்றதெனவும் தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யூபிலி ஆண்டில் புனித வாயில்களைத் திறந்துவைத்த நாங்கள், இயேசுவின் கல்லறை திறக்க உயிர்ப்பைக் கொண்டாடும்போது நாமும் நமது மனங்களையும் திறந்து அனைவரையும் ஏற்றுக்கொண்டு வாழ இவ்வுயிர்ப்புவிழா அழைத்து நிற்கின்றதெனவும் வலியிறுத்தியுள்ளார்.

By admin