யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் 2025ஆம் ஆண்டுக்கான ஆலோசனைக்குழு கூட்டம் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இவ்வருடம் குடும்பங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட், திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி நெவிஸ் மற்றும் ஆலோசனைக்குழு அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.