உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான இறைதியான வழிபாடு 03ஆம் திகதி கடந்த திங்கிட்கிழமை யாழ் பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறை அனுபவ பகிர்வு, நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்றன.
இத்தியானத்தில் மறைமாவட்டத்தில் பணியாற்றும் 50ற்கும் அதிகமான குருக்கள், துறவிகள் பங்குபற்றியிருந்தனர்.