யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான சிறப்பு தியானம் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகிய இத்தியானம் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற நற்கருணை வழிபாடு மற்றும் ஒப்புரவு அருட்சாதனத்துடன் நிறைவடைந்தது.
தொடர்ந்து மாலை பேராலயத்தில் திருத்தைல மந்திரிப்பு திருப்பலியும் இடம்பெற்றது.
நற்கருணை வழிபாட்டை செபமாலைதாசர் சபை அருட்தந்தை ஜெபன் அவர்கள் வழிநடத்தியதுடன் தியான உரையை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் குருமுதல்வர் அவர்களால் கூட்டொருங்கியக்க திருஅவையின் இரண்டாவது அமர்வின் அடுத்தகட்ட செயற்பாடுகள் பற்றிய கருத்துரையும் வழங்கப்பட்டது.