யாழ் மறைமாவட்டத்தில் பணியாற்றும் சில குருக்களுக்கான பணி மாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.
தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள நெடுந்தீவு பங்கிற்கான புதிய பங்குதந்தையாக அருட்திரு விமலசேகரன் அவர்களும் புங்குடுதீவு பங்கின் புதிய பங்குதந்தையாக அருட்திரு நரேஸ் அவர்களும் தாழையடி பங்கின் புதிய பங்குதந்தையாக அருட்திரு வின்சன் அவர்களும் திருநெல்வேலி பங்கின் புதிய பங்குதந்தையாக அருட்திரு ஜோதிநாதன் அவர்களும் கோப்பாய் பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்திரு மென்பேட் அவர்களும் கிளிநொச்சி பங்கின் உதவிப் பங்குதந்தையாக அருட்திரு கமில்டன் அவர்களும் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனராக அருட்திரு ஜேம்ஸ் அவர்களும் புனித மடுத்தீனார் சிறிய குருமட உதவிக் குருவாக அருட்திரு அருள்நேசன் அவர்களும் புனித யோசேவ் வாஸ் தமிழ் இறையியல் கல்லூரியின் புதிய இயக்குனராக அருட்திரு யு.து.யு ஜெயறஞ்சன் அவர்களும் மற்றும் அருட்திரு அருள்தாசன் அவர்கள் புனித சவேரியார் குருமடத்திலும் புனித யோசேவ் வாஸ் தழிழ் இறையியல் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் பணிப்பெறுப்பிற்கும் ஆயர் அவர்களினால் நியமனம் பெற்று தங்களின் பணிப் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்கள்.