யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யூபிலி ஆண்டில் பங்குகளில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மறைக்கோட்ட மறையாசிரியர் நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.

யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 40 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin