யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஏற்பாட்டில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை ஜோண் கனீசியஸ், திருத்தொண்டர் கஜீஸ்காந், சலேசியன் சபையை சேர்ந்த அருட்சகோதரர் தவக்குமார் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குறும்படம், குழுவிளையாட்டுக்கள், குழு செயற்பாடுகள் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 124 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.