யாழ். புனித மரியன்னை பேராலய அன்னை திரேசா முதியோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால திருயாத்திரை கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதியோர் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற செபமாலை மற்றும் திருச்சிலுவைப்பாதை தியானம், திருப்பலி மற்றும் தவக்கால தியானத்தில் பங்குபற்றினார்கள்.
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர் திரு. எசார்வே அவர்கள் இத்தியானத்தை நெறிப்படுத்தியதுடன் திருப்பலியை பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் 60 வரையான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் பேராலய பங்குமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால திருயாத்திரை கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குமக்கள் வவுனிக்குளத்தில் அமைந்துள்ள கல்வாரி பூங்காவிற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு
இடம்பெற்ற செபமாலை தியானம், திருச்சிலுவை பாதை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவற்றில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 90 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.