யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/35-1.jpg)