யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்புவிழா 26ஆம் திகதி வியாழக்கிழமை மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2021, 2022 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். போதனா வைத்தியசாலை சிரேஸ்ட விடுதி வைத்தியர் திரு. செல்வரெட்ணம் ஜெகன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.