யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த அன்பின் இல்லம் மாணவர் விடுதியின் கட்டடப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டட திறப்புவிழா 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விடுதிக் காப்பாளர் அருட்தந்தை துசியந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய விடுதியை ஆசிர்வதித்து திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் விடுதி மாணவர்களின் பெற்றோர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன.