யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன், அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பழைய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரென பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் விருந்தினர் உரைகள் கலைநிகழ்வுகள் என்பவற்றுடன் நினைவுமலர் வெளியீடும் இடம்பெற்றது.

By admin