யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175ஆவது யூபிலி ஆண்டு கல்லூரி தின நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருநாள் திருப்பலியும் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கல்லூரிதின நிகழ்வுகளும் இடம்பெற்றன.

திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களென 3500 வரையானவர்கள் கலந்து செபித்தனர்.

திருப்பலியை தொடர்ந்து கல்லூரியின் மதுரம் சதுக்கத்தில் கல்லூரி கொடியேற்றப்பட்டு பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களால் கல்லூரி தின நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்படன.

கல்லூரி தினத்தை சிறப்பித்து அன்று மாலை பாடசாலை மைதானத்தில் இசை நிகழ்ச்சியும் இரவுணவும் இடம்பெற்றன.

By admin