யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தேசிய கராத்தே சம்மேளன தலைவர் திரு. அன்ரோ டினேஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.