யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் இவ்வருடமும் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வருகின்ற 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 05 மணிக்கு ஒப்புரவு அருளடையாளமும் திருப்பலியும் இடம்பெறுமென பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறுதிநாள் நிகழ்வுகள் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறுமெனவும் அன்று மாலை 05 மணிக்கு திருச்சிலுவைப்பாதையும், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து கல்லறை ஆண்டவர் திருச்சொருப முத்தியும் இடம்பெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

By admin