யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் நடாத்தப்பட்ட விவிலிய வினா விடை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
கௌரவ பாராளுமன்ற உறப்பினர் உயர்திரு. றஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். பிரதேச செயலர் உயர்திரு சாம்பசிவம் சுதர்சன் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.