கிறிஸ்தவ புராதன கட்டக்கலையில் வெளிப்படும் பண்பாட்டு மயமாக்கலுடன் இணைந்த சமய விழுமியங்களை தேடி அறிந்து கற்றுக்கொள்ளும் நோக்கோடு யாழ்.பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஓழுங்குபடுத்தலில் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கல்விச்சுற்றுலா கடந்த 02, 03, 04ஆம் திகதிகளில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஏற்பாட்டில் விரிவுரையாளர்கள் வினிபிறிடா சந்திரசேகர் மற்றும் வரவு விரிவுரையாளர் அருட்தந்தை ஜெயறஞ்சன் ஆகியோரின் உதவியுடன் இடம்பெற்ற இக்கற்றல் கள அனுபவ பயணத்தில் மாணவர்கள் கிறிஸ்தவ கலை மற்றும் கட்டடக்கலை நிறைந்த இடங்களை தரிசித்து அவற்றின் வரலாற்று சிறப்புக்களை அறிந்து கொண்டார்கள்.

அநுராதபுரம் தொல்பொருள் காட்சியகம், மிகிந்தலை, குருநகல் ரிதிகம ரிதி விகாரை, றாகம தேவத்த பசிலிக்கா, நீர்கொழும்பு புனித மரியன்னை ஆலயம், கண்டி திருத்துவக் கல்லூரி, கண்டி அம்பிட்டிய தேசிய குருமடம், குருநாகல் கிறிஸ்து அரசர் பேராலயம், நுவரெலியா கிறிஸ்து அரசர் அங்கிலிக்கன் சபை ஆலயம் ஆகிய இடங்களை தரிசித்து அவற்றின் சிறப்புமிக்க வரலாற்று தகவல்களை அறிந்துகொண்டனர்.

இக்கற்றல் களப்பயணத்தில் 11 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin