யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியில் நுண்கலைப்பாடங்கள் மற்றும் ஓவிய கண்காட்சி ஆகியவற்றை பயின்று சிறப்புத்தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும், கலைநிகழ்வுகளும் ஆசிரியர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் திரு. ரகுராம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் நடன ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி. பத்மினி செல்வேந்திரகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.