யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாண தென்மோடிக்கூத்து ஓராள் ஆற்றுகைப் போட்டி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் 17 வரையான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் முதலாம் பிரிவில் எமில்தாஸ் செபானா அவர்கள் 1ம் இடத்தையும், ஜோர்ஜ் ரொட்ரிக்கோ ஜெசோர் அவர்கள் 2ம் இடத்தையும், ஜெயந்தன் அக்சா அவர்கள் 3ம் இடத்தையும் இரண்டாம் பிரிவில் 1ம் இடத்தை மேரி கொன்சிகா பேட்டஸ் அவர்களும், 2ம் இடத்தை வின்சன் பெனடிற் கிறிஸ்ரின் சாகிதன் அவர்களும், 3ம் இடத்தை பிராங்கிளின் றூஸ்வெல்ட் ஸ்ரெபிகிராவ் அவர்களும் மூன்றாம் பிரிவில் மேரி றக்சாஜினி யோண்கெனடி அவர்கள் 1ம் இடத்தையும் எஸ்பீரியர் ஜெனாத் அவர்கள் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.