மரபுவழி ஆற்றுகையாளரை ஊக்கப்படுத்தி நலிந்து செல்லும் கூத்து மரபுக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கோடு யாழ். திருமறைக்கலாமன்றம் தென்மோடிக்கூத்து ஒராள் ஆற்றுகை போட்டி ஒன்றினை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றது.
ஒருவரே தனி ஆற்றுகையாளராக பங்கேற்கும் இப்போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குபற்ற முடியும் எனவும் 3பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்போட்டியில் 1ஆம் பிரிவில் தரம் 6-9 வழரயான மாணவர்களும் 2ஆம் பிரிவில் 10-13 வரையான மாணவர்களும் 3ஆம் பிரிவில் திறந்த போடடியாக 20-35 வரையானவர்கள் பங்குபற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் திருமறைக் கலாமன்றம் ,இல.238, பிரதான வீதி,யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தில் தமது பெயர் விபரங்களை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.