யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி தயாளசீலி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை டிலூசன் பியூமால் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.