‘இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடர்பான நிலைப்பாடு’ என்னும் தலைப்பில் யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் கல்வி குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 16ஆம் திகதி திங்கட்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அருட்தந்தை டானியல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக அரசறிவியல்துறை தலைவர் பேராசிரியர் திரு.கணேசலிங்கம் மற்றும் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை விரிவுரையாளர் அருட்தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்தமர்வை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் மற்றும் பொதுநிலையினர் என பலரும் பங்குபற்றி பயனடைந்தனர்.