யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஊறணி, பலாலி பிரதேச சிறுவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி புனித ஆரோக்கிய அன்னை வளாகத்தில் நடைபெற்றது.

நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டலில் ஊறணி பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு அவர்களின் கவிதைகள், கட்டுரைகள், சித்திரங்கள், பாடல்களை போன்ற ஆக்கங்களை உள்ளடக்கிய மூன்று சஞ்சிகைகள் வெளியீடும் சிறார்களுக்கான தலைமைத்துவ பயிற்சியும் இடம்பெற்றன.

யாழ். மாவட்ட செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. நீலாம்பரன் மற்றும் கரித்தாஸ் கியூடெக் நிறுவன உத்தியோகத்தர்கள் வளவாளராக கலந்து இப்பயிற்சியை நெறிப்டுத்தியிருந்தனர். தொடர்ந்து அன்றைய தின அரங்க நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தை தேவராஜன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் பலாலி, ஊறணி பிரதேசங்களை சேர்ந்த 150 வரையான கிறிஸ்தவ, இந்துசமய சிறார்களும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin